வெள்ளப்பெருக்கில் நீச்சல் அடித்த ஆஸ்திரேலியர்
வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கனத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதைப் பொருட்படுத்தாமல் ஒருவர் நீச்சல் அடித்தார்.
Palm Beach கோல்ஃப் நிலையத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் ஒருவர் நீந்திக்கொண்டிருந்தார்.
அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.
"சந்தர்ப்பம் கிடைத்தால் அதைப் பயன்படுத்தவேண்டும்," என்கிறார் ஒருவர்.
"முதலைகள் உள்ளனவா? எச்சரிக்கை!" என்கிறார் மற்றொருவர்.
கனத்த மழையால் சிட்னி உட்பட நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
கார்கள் மூழ்கியுள்ளன. சாலைகளில் நடமாட முடியவில்லை.
பலத்த காற்றால் மரக்கிளை விழுந்ததில் ஒரு பெண் மாண்டார்.
சிலர் தங்கள் வீடுகளிலிருந்து அவசரமாக வெளியேறினர்.
நிலவரம் மோசமாக இருக்கிறது. சென்ற சனிக்கிழமை (ஜனவரி 17) மாநிலத்தின் அவசரகாலச் சேவைத் துறை உச்சநிலை எச்சரிக்கையை விடுத்தது.
அனைவரும் அமைதி காக்குமாறு துறையின் தலைவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : CNA