அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைய முயன்ற ஆடவர் கைது
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைய முயன்ற ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் ஒரு வெட்டுக் கத்தியும், மூன்று கத்திகளும் இருந்ததாகத் தெரிகிறது.
சோதனைச் சாவடியைக் கடந்து நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைய முயன்றபோது சந்தேக நபர் பிடிபட்டார்.
நுழைவாயில் ஊடுகதிர்ச் சோதனைக் கருவி அவரிடமிருந்த வெட்டுக் கத்தியைக் காட்டிக் கொடுத்தது.
பிறகு அவருடைய பையிலிருந்த கத்திகள் கண்டறியப்பட்டன.
சந்தேக நபர் யார் என்ற தகவலைக் காவல்துறை வெளியிடவில்லை.
பல்வேறு அபாயமான ஆயுதங்களை வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump), குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர்களைச் சந்திக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குச் செல்லவிருந்தார். அதற்குச் சற்று முன்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.