சக ஊழியரின் வீட்டிற்குள் 20 முறை அத்துமீறி நுழைந்த ஆடவர்

Unsplash/Jaye Haych
ஜப்பானில் ஆடவர் ஒருவர் சக ஊழியரின் வீட்டிற்குள் 20 முறை திருட்டுத்தனமாக நுழைந்து 300க்கும் மேற்பட்ட நிழற்படங்களை எடுத்துள்ளார்.
27 வயது யூகி முராய் (Yuki Murai) தமது சக ஊழியரின் கவனத்தைப் பெற அவ்வாறு செய்தார்.
முராய் தம் பணியிடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண்ணுக்கு அடிக்கடி குறுஞ்செய்திகளை அனுப்பினார்.
ஒரு கட்டத்தில் அப்பெண் பதிலனுப்புவதை நிறுத்திவிட்டார்.
ஒருநாள் அவர் இல்லாதபோது முராய் அவரது வீட்டுச் சாவியைத் தேடியெடுத்து அதைப் படம் பிடித்தார்.
படத்தைக்கொண்டு ஒரு நகல் சாவியை வாங்கினார்.
பெண்ணின் நடவடிக்கைகளைக் கவனித்த முராய் பின்னர் அவரது வீட்டுக்குள் புகுந்து உலாவினார்.
அவரது ஆடைகளைத் திருடி நினைவுப் பொருள்களாக வைத்துக்கொண்டார்.
இடம் மாறிய பொருள்களையும் கால்தடங்களையும் கண்ட பெண்ணுக்குச் சந்தேகம் எழுந்தது.
அவர் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் முராயின் அத்துமீறலைக் கண்டறிந்து காவலர்களை அழைத்தார்.
முராய் திருடியதாகவும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார்.