Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

$800 மில்லியன் மதிப்புமிக்க bitcoin நாணய விவரங்களை மீட்கப் போராடும் ஆடவர்

வாசிப்புநேரம் -
வேல்ஸின் (Wales) தலைநகர் கார்டிவ்வில் (Cardiff) 800 மில்லியன் டாலர் (1.07 பில்லியன் வெள்ளி) மதிப்புமிக்க bitcoin நாணயங்களின் விவரங்கள் அடங்கிய தரவுச் சேமிப்புச் சாதனத்தை (hard drive) மீட்பதற்காகக் குப்பை நிரப்பும் இடத்தை வாங்க ஓர் ஆடவர் முயல்வதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்தது.

திரு ஜேம்ஸ் ஹாவல்ஸ் (James Howells) என்பவர் 2013ஆம் ஆண்டில் தமது தரவுச் சேமிப்புச் சாதனத்தைத் தவறுதலாக வீசிவிட்டார்.

பல ஆண்டுகளாக அதனை குப்பை நிரப்பும் இடத்திலிருந்து மீட்க அதிகாரிகளிடம் அனுமதி கோரி வந்துள்ளார்.

2021ஆம் ஆண்டில் நியூபோர்ட் (Newport) நகர மன்றத்திடம் குப்பை நிரப்பும் இடத்தை தோண்டுவதற்கு அனுமதி கோரி
70 மில்லியன் டாலர் (93.7 மில்லியன் வெள்ளி) கொடுக்க முன்வந்தார்.

ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தரவு சேமிப்பு சாதனம் நிச்சயமாகக் கிடைக்கும், கிடைத்தாலும் வேலை செய்யும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை எனும் அடிப்படையில் திரு ஹாவல்ஸின் கோரிக்கை நிராகரிப்பட்டது என்று நகர மன்றப் பேச்சாளர் விளக்கமளித்தார்.

பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்துத் திரு ஹாவல்ஸ் தொடுத்த வழக்கின் விசாரணையைத் தள்ளுபடி செய்துள்ளது.

அதனால் அவர் குப்பை நிரப்பும் இடத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

அதற்கான தொகையைத் திரட்டிவிட்டதாகவும் X தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்