உலகம் trending
சில்லறைக் காசு கொடுத்து ஸ்கூட்டர் வாங்கினார்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
This audio is generated by an AI tool.
ஸ்கூட்டரின் விலை 123,000 ரூபாய் (சுமார் 1,650 வெள்ளி).
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஒருவர் அதைச் சில்லறை நாணயங்களைக் கொடுத்து வாங்கியுள்ளார்.
எல்லாம் பத்து ரூபாய் நாணயம்.
ஊடகங்களில் வெளியான காணொளியில் பா ரவி ஜோசஃப் (B Ravi Joseph) மேசை நிறைய நாணயங்களுடன் கடையில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது.
அவர் பணத்தை 3 ஆண்டுகளாகச் சேமித்ததாக India Today ஊடகம் சொன்னது.
வீட்டுக்குப் பொருள் வாங்கும்போதெல்லாம் அவர் கிடைக்கும் 10 ரூபாய் நாணயங்களைச் சேமித்து வைப்பார்.
திரு ஜோசஃபின் பழக்கத்தை அவருடைய குடும்பத்தார் விநோதமாகப் பார்த்தனர்.
அதனால் பலன் கிடைக்குமா என்றும் அவர்கள் நினைத்ததாக India Today சொன்னது.
ஆனால் சிறுகச் சிறுகச் சேர்த்த நாணயங்கள் மொத்தம் 12,300 ஆயின.
அந்தச் சமயத்தில் திரு ஜோசஃபின் ஸ்கூட்டர் ஒழுங்காக வேலை செய்யாமல் போனது.
புதிய ஸ்கூட்டர் வாங்குவதற்கான நேரம் வந்தது.
நாணயங்களை வைத்து அதை வாங்க எண்ணினார் அவர்.
ஸ்கூட்டர் கடையும் நாணயங்களை ஏற்றுக்கொண்டது.