ஜொகூர் உணவகத்தில் ஆடவர் சுட்டுக்கொலை
வாசிப்புநேரம் -
மலேசியாவில் ஜொகூர் பாருவில் தமது நண்பர்களுடன் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று காலை அவர்கள் மதிய உணவு உட்கொண்ட வேளையில் அந்தச் சம்பவம் நடந்ததாக The Star செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சம்பவத்தை ஜொகூர் பாரு காவல்துறை உறுதிசெய்தது.
3 முறை வெடிப்புச்சத்தம் கேட்டது என்றும் அதன்பின்னர் மோட்டார்சைக்கிள் ஒன்று அவ்விடத்தைவிட்டுப் பறந்தது என்றும் அங்கிருந்த பட்டறைத் தொழிலாளர் ஒருவர் கூறினார்.
அடுத்த கணம் உணவகத்துக்கு வெளியில் ஆடவர் தரையில் கிடப்பதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
Info Berita Semasa Facebook பக்கத்தில் சடலம் மீது வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்ததைக் காட்டும் காணொளி பதிவேற்றப்பட்டது.

ஆதாரம் : Others