Skip to main content
நீர்யானை மிரண்டது... சட்டம் பாய்ந்தது!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நீர்யானை மிரண்டது... சட்டம் பாய்ந்தது!

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இணையதளங்களின் செல்லப்பிள்ளையான 'மூ டெங்' (Moo Deng) என்ற குட்டி நீர்யானையின் அமைதியைக் குலைத்த நபருக்குத் தாய்லந்து நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

10,000 பாட் (சுமார் 382 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த மாதம் பேங்காக் நகருக்கு அருகிலுள்ள 'காவ் கியாவ்' (Khao Kheow) திறந்தவெளி விலங்கியல் பூங்காவில் அந்தச் சம்பவம் நடந்தது.

ஒரு நபர் விதிமுறைகளை மீறி மூ டெங்கின் இருப்பிடத்திற்குள் நுழைந்தார்.

அவர் அந்த நீர்யானையைப் படம்பிடித்தது கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

இந்த அத்துமீறலால் மூ டெங் சிறு பதற்றமடைந்தது.

அதற்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என பூங்கா நிர்வாகம் உறுதிப்படுத்தியது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனது தவற்றை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

"விலங்குகள் கூண்டுக்குள் இருந்தாலும் அல்லது காட்டில் இருந்தாலும், அவற்றின் உரிமைகளை யாரும் மீறக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது" என்று பூங்கா இயக்குனர் நரோங்விட் சோட்சோய் (Narongwit Chodchoy) தெரிவித்தார்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்