Skip to main content
வனவிலங்குப் பூங்காவில் புலி அடித்து ஆடவர் பலி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வனவிலங்குப் பூங்காவில் புலி அடித்து ஆடவர் பலி

வாசிப்புநேரம் -
வனவிலங்குப் பூங்காவில் புலி அடித்து ஆடவர் பலி

படம்: AP Photo/Kirsty Wigglesworth

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரிட்டனில் பிரபல வனவிலங்குப் பூங்காவில் (Yorkshire Wildlife Park) புலி தாக்கியதில் ஆடவர் ஒருவர் மாண்டார்.

ஆடவர் புலி இருந்த வளாகத்துக்குள் சென்றார்.

அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்ற விவரம் கூறப்படவில்லை.

புலி அவரைத் தாக்கியது; அவர் கடுமையாகக் காயமுற்றார்.

மருத்துவ ஊழியர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புலி அவரைத் தாக்கிய பின்பு அதன் வளாகத்துக்குள்யேயே இருந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு வேறு எந்த ஆபத்தும் அது கொடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

பூங்காவிலிருந்த பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்; பூங்கா மூடப்பட்டது.

பூங்காவின் Land of the Tigers எனும் பகுதியில் அமூர் (Amur) வகைப் புலிகள் உள்ளன.

பார்வையாளர்கள் அவற்றைக் கண்டு ரசிக்க 300 மீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட நடைபாதையும் உள்ளது.

அருகிவரும் உயிரினங்களில் அமூர் புலியும் ஒன்று.

உலகெங்கும் சுமார் 500 அமூர் புலிகள் மட்டுமே காடுகளில் எஞ்சியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.



 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்