பிரிட்டனில் பாதசாரிகள் மீது காரை மோதிய சந்தேக நபர் அடையாளம்
Oli SCARFF / AFP
This audio is generated by an AI tool.
பிரிட்டனின் மென்செஸ்ட்டர் (Manchester) நகரில் பாதசாரிகள் மீது காரை மோதியவர் சிரியா வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஆடவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
35 வயது ஜிஹாத் அல் ஷாமி (Jihad Al-Shamie) யூத ஆலயம் அருகே தாக்குதல் நடத்தியதாகக் காவல்துறையினர் நம்புகின்றனர்.
சந்தேகத்துக்குரியவர் பொது மக்கள் மீது காரை மோதிய பிறகு கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தினார். இருவர் மாண்டனர். மூவரின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது.
பிரிட்டிஷ் காவல்துறை அதையொரு பயங்கரவாதச் சம்பவமாய் வகைப்படுத்தியுள்ளது.
உதவி அழைப்பு கிடைத்த 7 நிமிடத்துக்குள் சந்தேகத்துக்குரியவரை காவல்துறை சுட்டு வீழ்த்தியது. பிறகு மூவர் கைது செய்யப்பட்டனர்.
பிரிட்டனில் யூதர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்தும் செய்யப்படும் என்று பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) கூறினார்.
தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த திரு ஸ்டாமர் பிரிட்டனில் அதிகரித்துவரும் யூத எதிர்ப்பை நிராகரிக்கும்படி வலியுறுத்தினார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் போர் தொடங்கியதிலிருந்து யூதர்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இஸ்ரேலில் வாழும் பெரும்பாலோர் யூத சமயத்தைச் சேர்ந்தவர்கள்.