Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிமியர் லீக் பட்டியலில் முன்னணிக்குத் திரும்பியது மென்செஸ்டர் சிட்டி

வாசிப்புநேரம் -
பிரிமியர் லீக் பட்டியலில் முன்னணிக்குத் திரும்பியது மென்செஸ்டர் சிட்டி

Facebook/Manchester City

மென்செஸ்டர் சிட்டி (Manchester City) பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்குத் திரும்பியிருக்கிறது.

எமிரெட்ஸ் (Emirates) அரங்கத்தில் நடைபெற்ற EPL ஆட்டத்தில் சிட்டி 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனலைத் (Arsenal) தோற்கடித்தது.

இதுவரை முன்னணியில் இருந்த ஆர்சனலைப் பின்னுக்குத் தள்ளி கோல் வித்தியாச அடிப்படையில் சிட்டி முதலிடத்திற்குத் திரும்பியது.

பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளருமான சிட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக முன்னணிக்கு வந்துள்ளது.

ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் சிட்டிக்கு கெவின் டெ புரோய்னெ (Kevin De Bruyne) முதல் கோல் போட்டார்.

அதனை ஆர்சனல் ஆட்டக்காரர் புகாயோ சாக்கா (Bukayo Saka) 42ஆவது நிமிடத்தில் சமப்படுத்தினார்.

அதன் பிறகு சிட்டி 72, 82ஆவது நிமிடங்களில் மேலும் இரு கோல்களைப் புகுத்தி வெற்றியை உறுதிசெய்தது.

அந்தக் கோல்களை ஜேக் கிரீலிஷ்ஷும் (Jack Grealish) எர்லிங் ஹாலாண்டும் (Erling Haaland) அடித்தனர்.

பட்டியலில் தற்போது சிட்டியும் ஆர்சனலும் சமமாக 51 புள்ளிகளைக் கொண்டுள்ளன.

ஆயினும் கோல் வித்தியாச அடிப்படையில் சிட்டி முன்னணியில் உள்ளது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்