மென்செஸ்ட்டர் சிட்டியின் தோல்வியில்லா ஆட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்ன்மத்
வாசிப்புநேரம் -
![மென்செஸ்ட்டர் சிட்டியின் தோல்வியில்லா ஆட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்ன்மத் மென்செஸ்ட்டர் சிட்டியின் தோல்வியில்லா ஆட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்ன்மத்](https://dam.mediacorp.sg/image/upload/s--vYUR_L5I--/c_fill,g_auto,h_468,w_830/f_auto,q_auto/v1/mediacorp/seithi/images/2024/11/03/bournemouth.jpg?itok=2GMoS9B4)
(படம்: JUSTIN TALLIS / AFP)
பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளர் மென்செஸ்ட்டர் சிட்டி.
2023 டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து இதுவரை 32 ஆட்டங்களில் சிட்டி தோல்வியின்றி இருந்துவந்தது.
ஆனால் அந்தப் பெருமைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது போர்ன்மத் (Bournemouth).
நேற்று (2 நவம்பர்) நடைபெற்ற ஆட்டத்தில் போர்ன்மத் மென்செஸ்ட்டர் சிட்டியைத் தனது சொந்த அரங்கில் 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
9, 64ஆவது நிமிடங்களில் போர்ன்மத் கோல்கள் போட்டது. சிட்டி 82ஆவது நிமிடத்தில் கோலடித்தது.
இதுவரை 21 ஆட்டங்களில் இரு அணிகளும் சந்தித்துள்ளன. அவற்றில் போர்ன்மத்துக்குக் கிட்டியுள்ள முதல் வெற்றி இதுதான்.
வெற்றியை அடுத்து போர்ன்மத் லீக் பட்டியலில் 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் 2-1 என பிரைட்டனைத் (Brighton) தோற்கடித்தது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து பட்டியலில் 2ஆம் இடத்திலிருந்த லிவர்பூல் முதலிடத்திற்கு முன்னேறியது.
2 புள்ளிகள் வித்தியாசத்தில் சிட்டி 2ஆம் இடத்திற்கு இறங்கியது.

ஆதாரம் : Others