Skip to main content
போப் பிரான்சிஸ் ஏழை எளியோருக்குக் குரல் கொடுத்தவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

போப் பிரான்சிஸ் ஏழை எளியோருக்குக் குரல் கொடுத்தவர் - இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்கள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானார்.

பல உலகத் தலைவர்கள் கத்தோலிக்கர்களுக்குச் சமூக வலைத்தளங்களின்வழி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவற்றில் சில....

"போப் பிரான்சிஸ் ஏழை எளியோருக்கு உதவிக்கரம் நீட்டினார். அவதிப்படுவோருக்கு நம்பிக்கை அளித்தார். அவர் இந்திய மக்கள் மீது வைத்திருந்த அன்பு எப்போதும் போற்றப்படும்,"

- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

"போப் பிரான்சிஸ் எளிதில் பாதிக்கக்கூடியவர்களுக்குக் குரல் கொடுத்தவர். உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தச் செய்தி பலருக்குப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்,"

- பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன்

"போப் ஆற்றிய சேவை, அவர் காட்டிய கருணை... அவர் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரது நினைவுகள் பலரது மனத்தில் எப்போதும் நிலைத்து நிற்கும்,"

- நெதர்லந்துப் பிரதமர் டிக் ஸ்கூப்

"போப்பின் மறைவு வருத்தமளிக்கிறது. பணிவு மிகுந்தவர். வெவ்வேறு சமயங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை ஊக்குவித்தார்,"

- நியூசிலந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன்
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்