Skip to main content
மரடோனாவின் 'Golden Ball'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மரடோனாவின் 'Golden Ball' - கிண்ணம் குடும்பத்துக்கு வருமா? ஏலத்துக்குப் போகுமா? மே 30இல் முடிவு!

வாசிப்புநேரம் -
மறைந்த காற்பந்து ஜாம்பவான் டியேகோ மரடோனாவின் (Diego Maradona) 'Golden Ball' கிண்ணத்தை விற்கக்கூடாது என்று அவரது குடும்பம் போராடி வருகிறது.

ஆனால் ஜூன் 6ஆம் அதனை ஏலத்தில் விற்பதற்குப் பாரிஸில் உள்ள Aguttes ஏல நிறுவனம் தயாராகி வருகிறது.

அந்தக் கிண்ணம் மரடோனாவின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுமா? அல்லது ஏலத்தில் விற்பனையாகுமா என்ற முடிவு மே 30 தெரியவரும்.

அன்றைய நாள் நீதிமன்றம் அதன் முடிவை அறிவிக்கும்.

ஏன் இந்தச் சர்ச்சை?

1986 மெக்சிக்கோ உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மிகச் சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை வென்ற மரடோனாவுக்கு அந்த 'Golden Ball' கிண்ணம் வழங்கப்பட்டது.

ஆனால் 3 ஆண்டுகள் கழித்து நேப்பல்ஸ் (Naples) நகரில் உள்ள வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் கிண்ணம் திருடப்பட்டது.

பிறகு 2016ஆம் ஆண்டு பழைய பொருள்களைச் சேகரிக்கும் ஒருவர் அந்தக் கிண்ணத்தைச் சாதாரண கடையில் இருந்து 500 யூரோ விலையில் ஏலத்தில் வாங்கினார்.

அது மரடோனாவின் கிண்ணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததால் அவர் மரடோனாவின் வழக்கறிஞர்களில் ஒருவரைத் தொடர்புகொண்டார்.

அந்தக் கிண்ணம் தற்போது Aguttes ஏல நிறுவனத்திடம் இருக்கிறது.

அதனைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு மரடோனாவின் குடும்பம் கோருகிறது.

ஆனால் கிண்ணம் காணாமற்போனது முதல் இதுவரை ஒருமுறைகூடப் புகார் செய்யாத குடும்பம் திடீரென்று 35 ஆண்டுகள் கழித்து அதற்கு உரிமை கொண்டாடுவது சந்தர்ப்பவாதம் என்று ஏல நிறுவனம் சாடுகிறது.

கடைசியில் கிண்ணம் யாருக்குப் போகும்?

நீதிமன்றத்தின் கையில்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்