மராப்பி எரிமலை வெடிப்பு - முடிவுற்றன மீட்புப் பணிகள்
AP
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவில் உள்ள மராப்பி (Marapi) எரிமலை வெடிப்பையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (3 டிசம்பர்) எரிமலை குமுறத் தொடங்கியது.
அப்போது 75 மலையேறிகள் அங்கிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
எரிமலை வெடித்ததில் 23 பேர் மாண்டனர். எஞ்சியோர் மீட்கப்பட்டனர்.
மலையேறிகளில் சிலர் அதிகாரபூர்வமற்ற வழிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. எரிமலை தொடர்ந்து குமுறியபோதும் காணாமற்போனோரைத் தேடும் பணிகள் நடைபெற்றன.
காணாமற்போனவர்களில் சிலர் மாண்டுவிட்டனர் மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அதையடுத்து மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்தன.
குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் யாராவது காணாமற்போயிருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் அவர்களை அடையாளம் காண்பதற்கான தரவுகளுடன் தங்களைச் சந்திக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.