Skip to main content
கனடாவுக்குப் புதுப் பிரதமர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடாவுக்குப் புதுப் பிரதமர்

வாசிப்புநேரம் -
கனடாவில் நாளை புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கவிருக்கிறது.

மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான திரு மார்க் கார்னி நாட்டின் பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.

திரு ஜஸ்ட்டின் ட்ரூடோ சுமார் பத்தாண்டாக அந்தப் பதவியை வகித்தார்.

தற்போதுள்ள அமைச்சரவையில் 37 உறுப்பினர்கள் உள்ளனர்.

திரு கார்னி அதைப் பாதியாகக் குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்திற்குள் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் திரு கார்னி மிதவாதக் கட்சிக்குத் தலைமை ஏற்க வேண்டும்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் தலைமைத்துவ வாக்கெடுப்பில் திரு கார்னி அபார வெற்றிபெற்றார்.

அரசியலுக்குப் புதியவர், நாடாளுமன்றத்தில் இடம்வகிக்காதவர்.

மக்கள் செல்வாக்கு எப்படி?

கருத்துக்கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் கட்சியைவிட மிதவாதக் கட்சி ஒரு விழுக்காட்டுப் புள்ளி பின்தங்கியிருக்கிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்