Skip to main content
கொலையில் முடிந்த திருமண வாழ்க்கை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கொலையில் முடிந்த திருமண வாழ்க்கை

வாசிப்புநேரம் -
கொலையில் முடிந்த திருமண வாழ்க்கை
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பெங்களூருவில் மனைவியைக் கொன்றுவிட்டு பீகாருக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் 24 வயது இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 25ஆம் தேதி பெங்களூருவின் கும்பளகோடு (Kumbalgodu) பகுதியில் அந்தச் சம்பவம் நடந்தது.

தீரஜ் குமார் தம் மனைவி ரீமா குமாரியைத் துணியால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் உடலைப் படுக்கை விரிப்பில் சுற்றிவைத்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.

பீகார் மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இருவரும், சுமார் 10 மாதங்களுக்கு முன்பு ரீமாவின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்திருந்தனர்.

பெங்களூருக்கு வந்த பிறகு ரீமா சமூக ஊடகங்களுக்காக காணொளிகள் தயாரிப்பதில் அதிக நேரம் செலவிட்டார்.

அதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம்.

சம்பவம் நடந்த நாளில், வீட்டுக்குத் திரும்பிய தீரஜுக்கு உணவு தயாரிக்கப்படவில்லை.

இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம்.

ரீமா முதலில் மரக்கட்டையால் தாக்கியதாகவும் அதன்பிறகே துணியால் அவரது கழுத்தை நெரித்ததாகவும் தீரஜ் கூறியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் வீட்டு உரிமையாளர் அறைக்குள் சென்றார்.

கழிப்பறை அருகே ரீமாவின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்