ஜக்கர்த்தா சந்தையை விழுங்கிய தீ - 700 பேர் பாதிப்பு
Adietiya Haswi/ via REUTERS
ஜக்கர்த்தாவின் ஜியுங் (Jiung) சந்தைக்கு அருகே ஏற்பட்ட தீயில் கிட்டத்தட்ட 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
300க்கும் அதிகமான கட்டடங்களுக்குச் சேதம்.
தீ நேற்று முன்தினம் (ஜூன் 1) ஏற்பட்டது.
காணொளி சமூக ஊடகங்களில் பரவுகிறது.
தீ வேகமாகப் பரவி சந்தையையும் சுற்றுவட்டாரத்தையும் விழுங்குவதைக் காணொளி காட்டுகிறது.
மறுநாள் கட்டடங்கள் கருகிய படங்கள் பரவின.
சந்தைக்குப் பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளில் தீ மூண்டதாகத் தெரிகிறது.
ஒரு வீட்டில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
தீயணைப்பாளர்கள் 7 மணி நேரம் போராடியதாக CNA சொன்னது.
மக்கள் தற்போது தற்காலிக முகாம்களில் வசிக்கின்றனர்.
யாரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விசாரணை தொடர்கிறது.