மலேசியாவுக்குத் திரும்பிய F1 - குளறுபடியான தொடக்கம்
வாசிப்புநேரம் -
படம்: Threads/transi3nce
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் F1 கார்ப்பந்தயம் சுமுகமாகத் தொடங்கவில்லை.
நிறையப் புகார்கள்.
மத்திய கிழக்குப் பூசலால் இந்த ஆண்டின் பஹ்ரேன் கிராண்ட் ப்ரீ (Grand Prix) பந்தயம் மலேசியாவில் நடைபெறுகிறது.
பந்தயம் நேற்று செப்பாங் பந்தயத்தடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தைச் சரியாக நிர்வகிக்கவில்லை, நீண்ட வரிசைகள், பந்தயம் நடைபெறும் இடத்தை அடையப் பல கிலோமீட்டர் நடக்கவேண்டும் எனப் பல புகார்கள்.
போக்குவரத்து வசதி சரியில்லை, மோசமான கூட்ட நெரிசல் என்று ரசிகர்களிடையே ஏகப்பட்ட குறைகூறல்கள்.
சிலர் பேருந்துக்கு ஒன்பது மணி நேரத்திற்குமேல் காத்திருந்ததாகக் கூறினர்.
சுமார் 100 பேருந்துகள் 10, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகையாளர்களை ஏற்றிச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனாலும் கூட்டத்தைச் சமாளிப்பதில் சிக்கல் இருந்ததாகக் கூறப்பட்டது.
தனியார் வாகனங்கள் பந்தய இடத்திற்குள் செல்ல அனுமதியில்லை.
மூன்று நாள் F1 கார்ப் பந்தயம் நாளை நிறைவடைகிறது.
அதைக் காணச் சுமார் 200,000 பேர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் F1 பந்தயம் இதற்குமுன் 2017ஆம் ஆண்டு செப்பாங்கில் நடைபெற்றது.

தொடர்புடையது:
ஆதாரம் : CNA