முன்னாள் தலைமகளின் சிறைத்தண்டனையை அதிகரித்த தென்கொரிய நீதிபதி மரணம்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Kim Hong-Ji
தென்கொரியாவின் முன்னாள் தலைமகளின் சிறைத்தண்டனையைச் சென்ற மாதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கிய நீதிபதி மரணமடைந்தார்.
திரு ஷின் ஜொங்-ஓ (Shin Jong-o) சோல் உயர் நீதிமன்றக் கட்டடத்தில் சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் மரணத்தில் சூது இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று அதிகாரி கூறினார்.
திரு ஷின் தற்கொலைக் குறிப்பைவிட்டுச் சென்றதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என அதிகாரி சொன்னார்.
சென்ற மாதம் அவர் முன்னாள் தலைமகள் கிம் கியோன் ஹீயின் (Kim Keon Hee) மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதியாக இருந்தார்.
பங்குவிலை ஏமாற்றம், ஊழல் உள்ளிட்ட குற்றங்களில் அவர் குற்றவாளி என்று திரு ஷின் தீர்ப்பளித்தார்.
முன்பு 20 மாதங்களாக இருந்த சிறைத்தண்டனையை அவர் 4 ஆண்டாக அதிகரித்தார்.

ஆதாரம் : AFP