Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகில் அதிகமான பிள்ளைகள் சின்னம்மைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை

வாசிப்புநேரம் -

உலகில் சுமார் 40 மில்லியன் பிள்ளைகள் சென்ற ஆண்டு சின்னம்மைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை.

COVID-19 நோய்ப்பரவலால் ஏற்பட்ட இடையூறுகள் அதற்குக் காரணம். உலகச் சுகாதார நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது. 

COVID நோய்க்கான தடுப்பூசிகள் வெகுவிரைவில் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

ஆனால் அதே நேரம் மற்ற நோய்களுக்குரிய வழக்கமான தடுப்பூசித் திட்டங்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது. 

மனிதர்களுக்கிடையே ஆக எளிதில் பரவக்கூடியது சின்னம்மை; 

பெரிய அளவிலான நோய்ப்பரவலைத் தடுக்க 95 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டிருக்கவேண்டியது அவசியம்;

எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்றது உலகச் சுகாதார நிறுவனம். 

சராசரியாக 1,000 பிள்ளைகளில் கிட்டத்தட்ட மூவர் சின்னம்மையால் ஏற்படும் சிக்கல்களால் மரணமடைகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்