ஐரோப்பா: இறைச்சி, பசும்பால் வகை உணவு உற்பத்தி நிறுவனங்கள் வெளியேற்றும் வெப்பவாயு மேலும் உயர்கிறது
ஐரோப்பாவின் மாபெரும் இறைச்சி, பசும்பால் வகை உணவு உற்பத்தி நிறுவனங்கள் வெளியேற்றும் வெப்பவாயுவின் அளவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கோப்புப் படம்: Bernama)
ஐரோப்பாவின் மாபெரும் இறைச்சி, பசும்பால் வகை உணவு உற்பத்தி நிறுவனங்கள் வெளியேற்றும் வெப்பவாயுவின் அளவு அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் ஐரோப்பாவின் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, வாத்து கோழி இறைச்சி, பால்வகை உணவுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் 35 பெரிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டதாக Institute for Agriculture and Trade Policy (IATP) நிலையம் குறிப்பிட்டது.
அவற்றின் விநியோகத் தொடரின் மூலம் வெளியேற்றப்படும் வெப்பவாயு, அவற்றின் பருவநிலை சார்ந்த திட்டங்கள் போன்றவை ஆய்வில் ஆராயப்பட்டன.
ஐரோப்பாவில் 2018ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட வெப்பவாயுவில் 7 விழுக்காட்டிற்கு அந்த நிறுவனங்கள் காரணம் என்று தெரியவந்தது.
அதிகரிக்கும் ஏற்றுமதிகளைச் சுட்டிய IATP, ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகள் மட்டுமே அதற்குக் காரணமல்ல என்று குறிப்பிட்டது.
எனவே, அத்தகைய பெரிய நிறுவனங்கள் எந்தவிதத் தண்டனையுமின்றி இயற்கைக்குக் கேடு விளைவித்தவாறு இயங்குவதாக IATP குறைகூறியது.