Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காற்பந்து வீரர் மரடோனாவின் மருத்துவப் பராமரிப்பில் குறை வைக்கப்பட்டதா? விசாரணை தொடக்கம்

வாசிப்புநேரம் -

உலகின் தலைசிறந்த காற்பந்து வீரரான டியேகோ மரடோனாவின் (Diego Maradona) மரணம் தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கவிருக்கிறது.

அலட்சியமாக இருந்ததாக 8 மருத்துவத் துறையினர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

மரடோனா ஈராண்டுக்குமுன் தமது 60ஆவது வயதில் மாரடைப்பால் மாண்டார். 

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டியை அகற்றுவதற்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. 

வீட்டில் குணமடைந்து வரும்போது அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பராமரிப்பில் குறைவைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு கூறுகிறது. 

அர்ஜென்டினத் தலைநகரம் போனஸ் அயர்சில் (Buenos Airesஇல்) உள்ள ஒரு பிரத்தியேகக் குடியிருப்புப் பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி குணமடைந்து வரும்போது அவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

அவரது பிள்ளைகள் இருவர் தந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது. 

மரடோனாவின் குடும்ப மருத்துவ உட்பட 8 பேர் குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர். 

சரியாகக் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்