Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெல்பர்னில் நூறாண்டுகளில் கண்டிராத அரியதொரு நிலநடுக்கம்

வாசிப்புநேரம் -
மெல்பர்னில் நூறாண்டுகளில் கண்டிராத அரியதொரு  நிலநடுக்கம்

(கோப்புப் படம்: Daniel Pockett/AAP Image via AP)

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் (Melbourne) நகரைக் கடந்த நூறாண்டுகளில் ஆகப்பெரிய நிலநடுக்கம் நேற்று முன்தினம் (28 மே) உலுக்கியது.

3.8 நிக்டர் அளவிலான நிலநடுக்கம் இரவு சுமார் 11.41 மணியளவில் ஏற்பட்டது.

அதன் ஆழம் 2 கிலோமீட்டர் என்று Geoscience Australia அரசாங்க நிறுவனம் தெரிவித்தது.

கட்டடங்கள் அசைந்தபோதிலும் நிலநடுக்கம் அங்கு அதிகச் சேதத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்குமுன் கடைசியாக 1902ஆம் ஆண்டில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மெல்பர்னில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தைப் பல மெல்பர்ன் குடியிருப்பாளர்கள் உணர்ந்தனர். அது குறித்து
21,000க்கும் மேற்பட்ட அறிக்கைகள் கிடைத்ததாக Geoscience Australia கூறியது.

நிலநடுக்கம் சுனாமி அபாயத்தைக் கொடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்