Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'குரோமிங்' - சமூக ஊடகச் சவாலைச் செய்த 13 வயதுச் சிறுமி மரணம்

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் (Melbourne) நகரில் சமூக ஊடகத்தில் பிரபலமாகிவந்த 'குரோமிங்' (chroming) சவாலைச் செய்த 13 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

உலோகச் சாயங்கள், பெட்ரோல் முதலிய ஆபத்தான ரசாயனங்களை நுகர்வதுதான் அந்தச் சவால்.

அதைச் செய்துபார்க்கும் முயற்சியில் இறங்கிய எஸ்ரா ஹெய்ன்ஸ் (Esra Haynes) எனும் சிறுமி 'spray' வாசனைத் திரவியத்தை நுகர்ந்ததாக 7news.com.au கூறுகிறது.

அந்தச் சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்ததாகச் சிறுமியின் தந்தை தெரிவித்தார். 'குரோமிங்' சவாலுக்குப் பிறகு சிறுமி சுயநினைவை இழந்தார். சிறுமிக்குத் திடீர் நெஞ்சுவலியும் ஏற்பட்டது. ஒன்றைரை வாரம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

உயிர்பிழைக்கப் போராடிய மகளின் துன்பத்தைக் கண்டு செயற்கை சுவாசக் கருவியை நிறுத்த வேண்டியதாயிற்று என்று அவரின் தந்தை கூறினார்.

தமது மகளுக்கு நேர்ந்த விபரீதம் வேறுயாருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதைச் சிறுமியின் பெற்றோர் வலியுறுத்திவருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்