Skip to main content
ஹாங்காங் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹாங்காங் தீ - குற்ற உணர்வால் தவிப்போருக்கு உதவி

வாசிப்புநேரம் -
ஹாங்காங் தீ - குற்ற உணர்வால் தவிப்போருக்கு உதவி
படம்: REUTERS/Maxim Shemetov
வெளியீடு : 06 Dec 2025 11:02AM புதுப்பிப்பு : 06 Dec 2025 01:02PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹாங்காங் குடியிருப்புக் கட்டடங்களில் ஏற்பட்ட தீயில் பாதிக்கப்பட்டோருக்கு மனநல ஆதரவு வழங்கப்படவுள்ளது.

நகரின் தலைமை நிர்வாகி ஜான் லீ (John Lee) மனநல ஆதரவை அதிகப்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தீயில் உயிர்தப்பியவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குக் குற்ற உணர்வு ஏற்படுவதாகவும் ஹாங்காங் சுகாதார அமைச்சர் கூறினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மனநல மருத்துவரை நியமிக்கவும் குறைந்தது 10 மனநல நிலையங்களை அமைக்கவும் திட்டமிடுவதாக மனநல ஆலோசனைக் குழுவின் தலைவர் லாம் சிங் சொய் (Lam Ching-choi) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மனநல ஆதரவு வழங்க மருத்துவர்களுக்குக் கூடுதல் பயிற்சி வழங்கப்படும் என்றும் திரு லாம் குறிப்பிட்டார்.

தை போ (Tai Po) வட்டாரத்தில் ஏற்பட்ட தீயில் 159 பேர் மாண்டனர். 30 பேரை இன்னமும் காணவில்லை.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்