Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி இந்தியாவுக்குச் செல்கிறார்

வாசிப்புநேரம் -
காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி இந்தியாவுக்குச் செல்கிறார்

படம்: JUAN MABROMATA / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரபலக் காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) வரும் டிசம்பர் மாதத்தில் தாம் இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாக Instagram தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

"இந்தியாவுக்குச் செல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என்று அவர் எழுதியிருந்தார்.

அவர் இந்தியாவில் கலை நிகழ்ச்சிகள், இளையர்களுக்கான காற்பந்துப் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

மேலும் அவர் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அறப்பணி நடவடிக்கைகளைத் தொடங்கிவைப்பார்.

இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களையும் சந்திக்கவிருப்பதாக மெஸ்ஸி சொன்னார்.

சத்தாதுரு தத்தா (Satadru Dutta) அறநிறுவனம் அவருடைய பயணத்துக்கு ஏற்பாடு செய்கிறது. திரு மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குச் செல்லவிருக்கிறார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்