900ஆவது கோல் அடித்தார் மெஸ்ஸி!
படம்: AFP/Connie FRANCE
This audio is generated by an AI tool.
காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) 900ஆவது கோலை அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
நெஷ்வில் SC (Nashville SC) அணிக்கு எதிரான Concacaf Champions Cup knock-out சுற்று ஆட்டத்தில் இண்டர் மயாமி (Inter Miami) அணிக்கு மெஸ்ஸி அந்த கோலை அடித்தார்.
ஆட்டம் தொடங்கிய 7ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் போட்டார்.
இதையடுத்து உலகக் காற்பந்து வரலாற்றில் 900ஆவது கோலைத் தொட்ட 2ஆவது ஆட்டக்காரராக மெஸ்ஸி திகழ்கிறார்.
அந்தச் சாதனையைத் தொட்ட முதல் ஆட்டக்காரர் மெஸ்ஸியின் வைரி கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo).
ரொனால்டோ கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் தமது 900ஆவது கோலை நிறைவு செய்தார்.
அதன் பிறகு தமது குழுவுக்கும் தேசிய அணிக்கும் ரொனால்டோ 59 கோல் அடித்திருக்கிறார்.
தற்போது ரொனால்டோவின் மொத்த கோல் எண்ணிக்கை 959.
காற்பந்து வரலாற்றில் 900 கோல் எண்ணிக்கையைத் தொட்ட இரு ஜாம்பவான்களாக ரொனால்டோவும் மெஸ்ஸியும் திகழ்கின்றனர்.
காற்பந்து சகாப்தம் பெலே (Pele) ஆயிரத்துக்கும் அதிகமான கோல்கள் அடித்திருப்பதாகக் கூறப்பட்டாலும் அவரின் கோல் எண்ணிக்கை 778 எனக் காற்பந்து புள்ளிவிவர நிறுவனம் ஒன்று கூறுகிறது.