Skip to main content
இணையத்தில் பரவும் மெஸ்ஸி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

இணையத்தில் பரவும் மெஸ்ஸி-லமீன் யமால் படம்... சந்தித்த தருணம்

வாசிப்புநேரம் -
இணையத்தில் பரவும் மெஸ்ஸி-லமீன் யமால் படம்... சந்தித்த தருணம்

படம்: AP/Joan Monfort

வெளியீடு : 16 Jul 2026 01:35PM புதுப்பிப்பு : 16 Jul 2026 01:41PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காற்பந்து மேதை லயனல் மெஸ்ஸி...

இளம் நட்சத்திரம் லமீன் யமால்...

2004ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை மெஸ்ஸி பார்சலோனா அணிக்கு (FC Barcelona) விளையாடினார். அங்கு அவர் எண் 10 சட்டையை அணிந்திருந்தார்.

இப்போது பார்சலோனா எண் 10 சட்டையின் சொந்தக்காரர் லமீன் யமால்.

இருவரும் வரும் திங்கட்கிழமை நடக்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து இறுதியாட்டத்தில் மோதவிருக்கின்றனர்.

ஆனால் இதற்கு முன்னரே இருவரும் சந்தித்தது உங்களுக்குத் தெரியுமா?
Related article image
படம்: AP/Joan Monfort
இணையத்தில் பரவிய படம்

2007ஆம் ஆண்டில் பார்சலோனா அணி ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் அவசர நிதிக்கு (UNICEF) நிதி திரட்ட சிறப்பு நாள்காட்டியைத் தயாரித்தது.

விளையாட்டாளர்கள் சில பிள்ளைகளோடும் அவர்களின் குடும்பத்தாரோடும் படம் எடுத்துக்கொண்டனர்.

படங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளில் ஒருவர் லமீன் யமால்.

பிறந்த சில மாதங்களிலேயே மெஸ்ஸியைச் சந்தித்துவிட்டார்!

அப்போது மெஸ்ஸிக்கு வயது 20 தான். பார்சலோனாவின் இளம் நட்சத்திரமாக இருந்தார்.

கைக்குழந்தை லமீன் யமாலை மெஸ்ஸி குளிப்பாட்டினார். அது படமாக எடுக்கப்பட்டு நாள்காட்டியில் சேர்க்கப்பட்டது.

அந்தப் படம் மீண்டும் இணையத்தில் பரவத் தொடங்கியது.

அப்போதே இரு காற்பந்து நட்சத்திரங்கள் சந்தித்ததை அறிந்து வியப்படைந்ததாகப் படத்தை எடுத்த ஜோன் மொன்ஃபோர்ட் (Joan Monfort) கூறினார்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்