Instagram, Facebook, WhatsAppஇல் சந்தாக் கட்டணம் அறிமுகம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AP/Richard Drew)
Meta நிறுவனம், Instagram, Facebook, WhatsApp ஆகிய செயலிகளுக்கு சந்தாத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
உலகெங்கும் Facebook Plus, Instagram Plus, WhatsApp Plus ஆகிய திட்டங்கள் அறிமுகம் காண்கின்றன.
வர்த்தகங்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் இன்னும் பல திட்டமிடப்படுவதாக Meta கூறியது.
செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட அம்சங்களும் அதில் அடங்கும்.
Facebook Plus, Instagram Plus ஆகிய இரண்டின் கட்டணம் மாதத்திற்கு 3 டாலர் 99 காசு;
WhatsApp Plusஇன் கட்டணம் மாதத்திற்கு 2 டாலர் 99 காசு எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Facebook Plus, Instagram Plus ஆகியவற்றில் தரவுகள் சம்பந்தப்பட்ட மேம்பட்ட அம்சங்கள் இடம்பெறும்.
WhatsApp Plus சேவையில் தனிப்பட்ட மணியோசைகள், பிரத்தியேக ஒட்டுவில்லைகள் (stickers) ஆகியவை இருக்கும்.
பல ஆண்டாக Meta நிறுவனம் வருவாய்க்கு விளம்பரங்களை அதிகம் சார்ந்துள்ளது.
புதிய சந்தாத் திட்டம் வருவாயைப் பன்முகப்படுத்தும் நிறுவனத்தின் முயற்சியாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : AFP