Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பைப் பயிற்றுவிப்பதில் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதா Meta?

வாசிப்புநேரம் -
செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பைப் பயிற்றுவிப்பதில் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதா Meta?

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

அமெரிக்காவில் Meta நிறுவனம், செயற்கை நுண்ணறிவுக் (Artificial Intelligence - AI) கட்டமைப்பைப் பயிற்றுவித்ததில் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பைப் பயிற்றுவிக்கத் தங்கள் புத்தகங்களின் அதிகாரபூர்வமற்ற பதிப்புகளை Meta பயன்படுத்தியதாக எழுத்தாளர்கள் 2023ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தனர்.

நேற்று முன்தினம் (8 ஜனவரி) நீதிமன்ற விசாரணையின்போது சில ஆவணங்கள் வெளியிடப்பட்டன. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்கின் (Mark Zuckerberg) அனுமதியுடன் அந்தப் பணி மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தாக ராய்ர்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் Meta நிறுவனம் சட்டத்திற்கு உட்பட்டு புத்தகங்களைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறிவருகிறது.

இதற்கிடையே, Meta நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டதற்கான ஆதாரங்களைக் கொண்டு புதிய புகாரைப் பதிவுசெய்ய எழுத்தாளர்கள் நீதிமன்ற ஒப்புதலை நாடியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த ஆண்டு (2024) அந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தீர்ப்பளித்தார்.

ஆனால் நேற்று (9 ஜனவரி) எழுத்தாளர்கள் புதிய புகார் அளிப்பதற்கு நீதிபதி ஒப்புதல் வழங்கினார்.

இருப்பினும் புகாரின் நம்பகத்தன்மை குறித்துச் சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்ததாய் ராய்ர்ட்டஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்