Muse Spark - Metaவின் புதிய அறிமுகம்
(படம்: Fabrice COFFRINI / AFP)
This audio is generated by an AI tool.
Meta நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிறது.
புதிதாக அமைக்கப்பட்ட அதன் வல்லுநர் குழு Muse Spark எனும் புதிய AI மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.
அன்றாட வாழ்வின் நடைமுறைக்கு ஏற்ப அது வடிவமைக்கப்பட்டுள்ளதாக Facebookஐ நிர்வகிக்கும் Meta தெரிவித்தது.
புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தற்காலச் சூழலுக்கு ஏற்பச் செயல்படும்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் தாம் சாப்பிடப் போகும் உணவைப் படம் எடுத்துக்கொடுத்தால் அதன் கலோரி அளவை உடனே தெரிந்துகொள்ளலாம்.
ஓர் அன்பளிப்புக் குவளையை வாங்க விரும்பினால், அது வீட்டின் அலமாரியில் எப்படி இருக்கும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு படம் பிடித்துக்காட்டும்.
Meta நிறுவன இணையத் தளத்திலும் Meta AI செயலியிலும் பயனீட்டாளர்கள் புதிய மாதிரியைச் சோதித்துப் பார்க்கலாம்.
WhatsApp, Instagram, Facebook, Smart glasses எனும் விவேகக் கண்ணாடிகள் ஆகியவற்றில் விரைவில் அந்தப் புதிய தொழில்நுட்பம் கிடைக்கும் என்று Meta கூறியது.