Facebook, Instagram முதலிய Meta தளங்களின் சேவைகளில் தடங்கல்... ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

(படம்: Chris DELMAS / AFP)
Meta நிறுவனத்தின் Facebook, Instagram செயலிகளின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுவிட்டதாக downdetector.com கண்காணிப்புத் தளம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமையன்று (25 ஜனவரி) அமெரிக்காவிலுள்ள ஆயிரக்கணக்கான பயனீட்டாளர்கள் சேவைத் தடங்கலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
Instagram பயனீட்டாளர்கள் 12,000க்கும் மேற்பட்டவர்கள் Instagram செயலி செயல்பாட்டை இழந்ததாகத் தெரிவித்தனர். Facebook செயலியின் செயல்பாடுகள் குறித்து 8,000 புகார்கள் பெறப்பட்டன.
WhatsApp, Facebook Messenger ஆகிய குறுந்தகவல் அனுப்பும் செயலிகளிலும் பிரச்சினை ஏற்பட்டதாக downdetector.com தரவுகள் காட்டின.