Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'அமெரிக்காவின் Fentanyl வலிமருந்து நெருக்கடிக்குக் குடும்பங்களில் அரவணைப்பு இல்லாததே காரணம்' - மெக்சிகோ அதிபர்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் Fentanyl வலிமருந்து அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போக்கிற்குக் காரணம் பிள்ளைகளைப் போதுமான அளவுக்குக் குடும்பத்தார் அரவணைக்காததே என்று மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார்.

அளவுக்கு அதிகமான Fentanyl பயன்பாடு அமெரிக்காவில் நெருக்கடியாகக் கருதப்படுகிறது.

அது மெக்சிகோவில் உள்ள கும்பல்களால் அமெரிக்காவிற்கு அது கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் குடும்பம் சார்ந்த நற்பண்புகள் சீர்குலைந்துவிட்டதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவெல் லோப்பெஸ் ஒப்ரடோர் (Andres Manuel Lopez Obrador) குறிப்பிட்டார்.

அங்குப் பிள்ளைகளைப் பெற்றோர் நீண்டகாலம் வீட்டில் வசிக்கவிடுவதில்லை என்றார் அவர்.

மெக்சிகோ Fentanyl மருந்தை உற்பத்தி செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.

மெக்சிகோவில் நெருக்கமான குடும்பப் பண்புகளே Fentanyl நெருக்கடியிலிருந்து அந்நாட்டைக் காப்பாற்றியதாக அதிபர் குறிப்பிட்டார்.

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்