மெக்சிகோ விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு
வாசிப்புநேரம் -

(படம்:REUTERS/Luis Cortes)
மெக்சிகோ நகரிலுள்ள பிரதான விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர்,
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 27 வயது ஆடவர் என்று நம்பப்படுகிறது.
அவர் விமான நிலையத்தின் சுங்கப்பகுதியிலுள்ள பொருள்களைத் திருடிவிட்டுக் காரில் தப்பிக்க முயன்றுள்ளார்.
அவரைப் பிடிக்க காவல்துறை துரத்தியபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.
இதனால் விமான நிலையத்திலிருந்த பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைசியில் அந்த ஆடவரைக் காவல்துறையினர் வளைத்துப்பிடித்தனர்.
சம்பவத்தில் பயணிகள், வருகையாளர்கள் என யாரும் பாதிக்கப்படவில்லை.

ஆதாரம் : AFP