2026 உலகக் கிண்ணம்: மெக்சிக்கோவில் தொடங்கி நியூயார்க்கில் முடியும்
வாசிப்புநேரம் -
(படம்: ALFREDO ESTRELLA / AFP)
2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டம் மெக்சிக்கோவின் (Mexico) பிரபல Azteca அரங்கத்தில் நடைபெறும். அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (FIFA) தலைவர் கியானி இன்பான்ட்டினோ (Gianni Infantino) அதனை அறிவித்தார்.
இந்த முறை 48 அணிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள அந்தப் போட்டியை மெக்சிக்கோ, அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
1970, 1986 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு 3ஆவது முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறும் உலகின் முதல் அரங்கமாக Azteca திகழ்கிறது.
இதற்குமுன்னர் அந்த அரங்கத்தில் 1970, 1986 இறுதியாட்டங்கள் நடத்தப்பட்டன.
இம்முறை 2026 இறுதியாட்டம் நியூயார்க்கின் (New York) MetLife அரங்கத்தில் நடைபெறும்.

ஆதாரம் : AFP