மெக்சிகோவில் ஆயுதமேந்தித் தாக்குதல்... விளையாட்டரங்கில் 10 பேர் மரணம்

மெக்சிகோவின் மத்திய வட்டாரத்தில் போதைப்பொருள் கும்பல் நடத்திய தாக்குதலில் 10 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவானாஹுவாட்டோ (Guanajuato) மாநிலத்திலுள்ள தாரிமோரோ (Tarimoro) வட்டாரத்தில் இருக்கும் ஒரு விளையாட்டரங்கில் தாக்குதல் இடம்பெற்றதாக வட்டார அரசாங்க்தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்தது.
சம்பவ இடத்தில் 9 ஆடவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட இன்னொரு நபர் மருத்துவமனையில் இறந்ததாக அலுவலகம் கூறியது.
2006ஆம் ஆண்டில் மெக்சிகோ அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையைச் செயல்படுத்தத் தொடங்கியது.
அப்போதிலிருந்து இதுவரை போதைப்பொருள் தொடர்பாக இடம்பெற்ற கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை 340,000ஐத் தாண்டியிருப்பதாக அதிகாரத்துவத் தகவல்கள் காட்டுகின்றன.