மெக்சிகோவில் தசை தின்னும் ஒட்டுண்ணிச் சம்பவங்கள் 53% அதிகரிப்பு
வாசிப்புநேரம் -
REUTERS/Daniel Becerril/File Photo
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மெக்சிகோவில் தசை தின்னும் ஒட்டுண்ணி குறித்துப் பதிவாகியிருக்கும் சம்பவங்கள் 53 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.
அதுவும் நான்கே வாரங்களில்.
பெரும்பாலும் விலங்குகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
பசுக்கள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் ஆகியவற்றின் உடல்களில் new world screwworm எனும் ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்போது மனித உடலிலும் ஒட்டுண்ணி காணப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்னர் அமெரிக்காவில் முதல் ஒட்டுண்ணிச் சம்பவம் பதிவானது. அவர் லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோர் (El Salvador) சென்று திரும்பிய பின்னர் சம்பவம் பதிவானது.
அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டில் ஒட்டுண்ணிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டன. எனினும் லத்தீன் அமெரிக்காவில் அவை பரவுகின்றன.
மூத்தோரும் நோய்வாய்ப்பட்டவர்களும் கவனமாக இருக்கவேண்டும். தோல் புற்றுநோயால் அவதியுற்ற 86 வயது மூதாட்டி ஒருவர் ஒட்டுண்ணித் தொற்றால் மாண்டதாக மெக்சிகோவின் சுகாதார அமைச்சு கூறியது.