ஆந்தைக்குக் குளிர்சாதன வசதி...எந்த நாட்டில்?
வாசிப்புநேரம் -
மெக்சிகோவில் கடும் வெப்பமும் வறட்சியும் நீடிக்கின்றன.
அதனால் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெப்பத்தால் வெம்பி வதங்கும் விலங்குகளை அரசு சாரா அமைப்புகள் மீட்டுப் பராமரித்து வருகின்றன.
அவற்றில் ஓர் அமைப்பு ஆந்தைகளை மீட்டு அவற்றுக்கு மெக்சிகோ நகரிலிருந்து வரவழைக்கப்பட்ட உறைந்த எலியின் இறைச்சிகளை உணவாகக் கொடுத்துவருகிறது.
மற்றொரு விலங்குப் பூங்கா வெப்பத்தால் பாதிக்கப்பட்ட ஆந்தைகளுக்கும் இதர பறவைகளுக்கும் குளிர்சாதன அறைகளை உருவாக்கியிருக்கிறது.
கடந்த மே 9ஆம் தேதி மெக்சிகோவின் தொலைதூர வடக்குப் பகுதியில் வெப்பம் 50 டிகிரி செல்ஸியஸாகப் பதிவானது.
அப்போது வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்த வெவ்வேறு வகையான 15 பறவைகளை Selva Teenek வனவிலங்குப் பூங்காவின் தொண்டூழியர்கள் காப்பாற்றினர்.
இருந்தாலும் சில பறவைகள் தகிக்கும் வெப்பம், போதுமான நீர்ச்சத்து இல்லாதது, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகிய காரணங்களால் மடிந்துவிடுவதாகப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம் : AP