"எரிமலை எந்நேரத்திலும் வெடிக்கலாம்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்த மெக்சிக்கோ
வாசிப்புநேரம் -

(படம்: JOSE CASTAÑARES / AFP)
மெக்சிக்கோவில் Popocatepetl எரிமலை புகையையும் சாம்பலையும் வெளியேற்றிவருவதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
மக்களை இடம் மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் அதனைக் கவனித்துக்கொள்ளவிருக்கும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குக் கூடாரங்கள் அமைப்பதும் அவற்றில் ஒன்று.
அந்த எரிமலை தொடர்பில் மெக்சிக்கோவில் 3ஆம் கட்ட மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக Anadolu செய்தி கூறுகிறது.
Popocatepetl எரிமலை மெக்சிக்கோ, பியூப்லா (Puebla), மோரேலோஸ் (Morelos) எல்லையில் அமைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21 மே) வரை 573 Popocatepetl எரிமலை வெடிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 70 விழுக்காடு சிறிய அளவில் ஏற்பட்ட வெடிப்புகள்.
என்றாலும் மெக்சிக்கோ சிட்டியிலுள்ள 2 அனைத்துலக விமான நிலையங்களில் தொடர்ந்து 3 நாள்களாக விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டன.
Aeromexico நிறுவனம் நேற்று (22 மே) 46 விமானப் பயணங்களை ரத்துச் செய்தது.
சில பகுதிகளிலுள்ள பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஆதாரம் : Bernama