Skip to main content
துண்டிக்கப்பட்ட 6 தலைகள்... மெக்சிகோ சாலையில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

துண்டிக்கப்பட்ட 6 தலைகள்... மெக்சிகோ சாலையில்

வாசிப்புநேரம் -
துண்டிக்கப்பட்ட 6 தலைகள்... மெக்சிகோ சாலையில்

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மெக்சிகோவில் துண்டிக்கப்பட்ட 6 தலைகள் ஒரு சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பியூப்லா (Puebla), ட்லாக்ஸ்கலா (Tlaxcala) ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலையில் அவை கண்டெடுக்கப்பட்டன.

இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அந்த இரு மாநிலங்களிலும் நடைபெறுவது வழக்கமல்ல என்று BBC கூறியது.

அவர்கள் எதற்காகக் கொலை செய்யப்பட்டனர் என்பது தெரியவில்லை.

எந்தக் குண்டர் கும்பல்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.

மற்ற குண்டர் கும்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் செய்தி கொண்ட ஒரு போர்வையும் சம்பவ இடத்தில் இருந்ததாக BBC சொன்னது.

6 தலைகளும் ஆண்களுடையது என்று உள்ளூர் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டது.

விசாரணை நடைபெறுகிறது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்