Skip to main content
மெக்சிக்கோவில் US$50 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மெக்சிக்கோவில் US$50 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்

வாசிப்புநேரம் -
மெக்சிக்கோவில் (Mexico) 42 மெட்ரிக் டன் எடையிலான methamphetamine போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு 50 மில்லியன் டாலருக்கும் அதிகம் (சுமார் 64 மில்லியன் வெள்ளி) என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்குமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார். இவ்வேளையில் இந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

மெக்சிக்கோ மீது அமெரிக்கா விதித்துள்ள வரிக்கு இந்தப் போதைப்பொருள் கடத்தல் குறிப்பாகச் செயற்கை போதைப்பொருள் கடத்தல் ஒரு காரணம் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குமுன்னர் கடந்த ஆண்டு (2024) அக்டோபரில் 8.3 டன் எடையிலான போதைப்பொருள் பசிபிக் கரைக்கு அப்பால் கப்பல்களிலிருந்து கைப்பற்றப்பட்டது.

கடலில் ஒரே நடவடிக்கையில் சிக்கிய ஆகப் பெரிய அளவிலான போதைப்பொருள் அதுவாகும்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்