மெக்சிகோவில் பிரசார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் பலி
வாசிப்புநேரம் -
(படம்: Julio Cesar AGUILAR / AFP)
மெக்சிகோவில் பிரசார மேடை சரிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்படக் குறைந்தது 9 பேர் மாண்டனர்.
சுமார் 50 பேர் காயமுற்றனர்.
அதிபர் வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸின் (Jorge Alvarez Maynez) பிரசாரத்தின்போது அந்தச் சம்பவம் நடந்தது.
மேடையோடு அங்குப் பொருத்தப்பட்டிருந்த பெரிய திரையும் விழுந்தது.
அப்போது மேனெஸும் அவரின் கட்சி உறுப்பினர்களும் மேடையில் இருந்தனர்.
38 வயது மேனெஸ் தாம் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.
பலத்த காற்று வீசியதால் மேடை விழுந்ததாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோப்பெஸ் ஓப்ரடார் (Andres Manuel Lopez Obrador) கூறினார்.
பாதிக்கப்பட்டோருக்கு அவர் தமது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
மெக்சிகோவில் அடுத்த மாதம் (ஜூன்) 2ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில் மேனெஸ் வெற்றிபெறும் வாய்ப்புக் குறைவே என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : AFP