Skip to main content
பேரங்காடியில் வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பேரங்காடியில் வெடிப்பு - 23 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
பேரங்காடியில் வெடிப்பு - 23 பேர் மரணம்
(படம்: Reuters)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மெக்சிகோவில் பேரங்காடி ஒன்றில் நேர்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 23 பேர் மாண்டனர்.

அவர்களில் சிறு பிள்ளைகளும் அடங்குவர்.

11 பேர் காயமுற்றனர்.

சொனோரா மாநிலத்தில் உள்ள Waldo's பேரங்காடியில் அசம்பாவிதம் நேர்ந்தது.

மின்சார மின்மாற்றி (electric transformer) கோளாற்றால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிப்புச் சம்பவம் ஒரு விபத்து என்று நம்பப்படுகிறது.

வெளிப்படையான விசாரணையை நடத்த உத்தரவிட்டிருப்பதாக சொனோரா மாநில ஆளுநர் கூறினார்.

காயமுற்றோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிப்பு ஏற்பட்டதும் வாடிக்கையாளர்கள் கடையினுள் தஞ்சம் புகுந்ததாகவும் பின்னர் தீயால் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும் மெக்சிகோ ஊடகங்கள் தெரிவித்தன.

மாண்டோரின் குடும்பத்தாருக்கு மெக்சிகோ அதிபர் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்