Skip to main content
மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டது - 13 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டது - 13 பேர் மரணம்
(படம்: Rusvel RASGADO / AFP)
வெளியீடு : 29 Dec 2025 10:54AM புதுப்பிப்பு : 29 Dec 2025 11:28AM

மெக்சிகோவின் ஒக்ஸாகா (Oaxaca) மாநிலத்தில் ரயிலின் ஒரு பகுதி தடம்புரண்டதில் 13 பேர் மாண்டனர்.

98 பேர் காயமுற்றனர்.

அந்த ரயிலில் சுமார் 250 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு உதவ கடற்படைச் செயலாளரும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் செல்வர் என்று மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) கூறினார்.

அந்த ரயில் பாதையை மெக்சிகோவின் கடற்படை நிர்வகிக்கிறது.

விபத்தின் காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்படும் என்று நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் தெரிவித்தது.

மெக்சிகோ வளைகுடாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே அந்த ரயில் தடம் அமைந்துள்ளது.

அதில் சரக்குகளும் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

அதன் செயல்பாடு 2023ஆம் ஆண்டு தொடங்கியது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்