MH370 விமானத்தின் தேடல் - மீண்டும் தொடங்குகிறது
வாசிப்புநேரம் -
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானத்திற்கான தேடல் இம்மாத (டிசம்பர்) இறுதியில் மீண்டும் தொடங்கவுள்ளது.
மலேசியாவின் போக்குவரத்து அமைச்சு அதைத் தெரிவித்தது.
239 பேர் பயணம் செய்த அந்த Boeing 777 விமானம் காணாமல்போய் 10 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி அது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டுச் சீனாவின் பெய்ச்சிங் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.
விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
நீண்ட காலம் தேடியும் விமானம் கிடைக்கவில்லை.
Ocean Infinity நிறுவனம் ஆழ்கடலில் தேடல் பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் இந்தியப் பெருங்கடலில் விமானத்தைத் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.
விமானத்தைக் கண்டுபிடித்தால் தான் கட்டணம் செலுத்தப்படும் என்ற விதிமுறையின்கீழ் Ocean Infinity நிறுவனம் தேடல் பணிகளை மேற்கொண்டது.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு ஒரு முடிவை வழங்குவதில் உறுதியாக இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

ஆதாரம் : AFP