Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தரையிறங்கும்போது தீப்பற்றிய பயணிகள் விமானம் - 100க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

வாசிப்புநேரம் -
தரையிறங்கும்போது தீப்பற்றிய பயணிகள் விமானம் - 100க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

(படம்: Handout / MIAMI-DADE FIRE RESCUE / AFP)

அமெரிக்காவின் மயாமி நகரில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பற்றியது.

எரியும் விமானத்திலிருந்து 100க்கு அதிகமான பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஆனால் யாரும் கடுமையாகக் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கும்போது விமானத்தைத் தரையிறக்க உதவும் கருவி செயலிழந்ததாக அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் குழு கூறியது.

அந்த Red Air விமானம் டாமினிக்கன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் புறப்பட்டது.

விமானத்தில் 130 பயணிகளும் விமானச் சிப்பந்திகள் 10 பேரும் இருந்தனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa