உலகம் trending
"என் உலகத்தைப் பாட்டியின் கண்களில் பார்த்தேன்" - பேரனின் உருக்கமான பதிவு
வாசிப்புநேரம் -
படம்: LinkedIn/Vyanktesh Bajaj
பெங்களூரில் உள்ள மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவன ஊழியர் ஒருவர் தமது 81 வயதுப் பாட்டியை முதன்முறையாக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து அவர் லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.
பலரும் இதை நெகிழ்ச்சியான தருணம் என்று பாராட்டுகின்றனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மூத்த மேலாளராகப் பணிபுரியும் வெங்க்டேஷ் பஜாஜ் (Vyanktesh Bajaj) நெஞ்சுருகத் தமது கதையைப் பகிர்ந்தார்.
வெங்க்டேஷ் மகாராஷ்டிராவின் மங்குருல்பீர் (Mangrulpir) என்ற சிறிய கிராமத்தில் வளர்ந்தவர்.
அங்கு நவீன உலகம் பற்றிய அறிவோ, பெரிய வாய்ப்புகளோ கிடையாது.
"சிறுவயதில் தொலைக்காட்சியில் பார்த்த பெரிய கண்ணாடிக் கட்டடங்களில் வேலை செய்ய வேண்டும் என்பது என் கனவு. பெங்களூரில் உள்ள மைக்ரோசாஃப்ட் வளாகத்திற்குள் என் பாட்டியைத் தோளோடு தோள் சேர்த்து அழைத்துச்சென்றேன்," என்று வெங்க்டேஷ் மகிழ்ச்சியுடன் எழுதினார்.
அங்குள்ள பிரமாண்ட தொழில்நுட்பமும் வேலைச் சூழலும் அவருக்குப் பெரும் மலைப்பைத் தந்தது.
அவருடைய லிங்க்ட்இன் பதிவு பலரது இதயங்களைத் தொட்டுள்ளது.
"ஒரு பாட்டியின் பெருமிதம் வேலையில் கிடைக்கும் எந்த அங்கீகாரத்தையும்விடப் பெரியது" என்று இணையவாசி ஒருவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Others/Hindustan Times