Skip to main content
எனது சொத்துகளில் 99%
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எனது சொத்துகளில் 99%-ஐத் தானம் செய்வேன் - பில் கேட்ஸ்

வாசிப்புநேரம் -
எனது சொத்துகளில் 99%-ஐத் தானம் செய்வேன் - பில் கேட்ஸ்

(படம்: Thomas SAMSON / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Microsoft நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) அடுத்த 20 ஆண்டுகளில் தனது சொத்துகளில் 99 விழுக்காட்டைத் தானம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

தமது அறக்கட்டளையின் மூலம் அதனைச் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2045இல் அறக்கட்டளையின் செயல்பாடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

"இறப்பிற்குப் பிறகு பலர் என்னைப் பற்றி விமர்சிக்கக்கூடும். ஆனால் ஒரு போதும் நான் செல்வந்தராக இறந்தேன் என்று கூற வாய்ப்புத் தரமாட்டேன்" என்றார்.

69 வயது திரு கேட்ஸ் இதுவரை சுமார் 100 பில்லியன் டாலரை (129 பில்லியன் வெள்ளி) சுகாதார, வளர்ச்சித் திட்டங்களுக்கு அளித்திருப்பதைச் சுட்டினார்.

அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 200 பில்லியன் டாலரை (259 பில்லியன் வெள்ளி) அந்தப் பணிகளுக்காக அவரது அறக்கட்டளை செலவிடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

திரு கேட்ஸ் 99 விழுக்காட்டுச் சொத்துகளைத் தானம் செய்தாலும் உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தில் இருப்பார் என்கிறது Bloomberg செய்தி நிறுவனம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்