Microsoftஇன் சில சேவைகளில் தடங்கல்... ஆயிரக் கணக்கானோர் பாதிப்பு...

(கோப்புப் படம்: Photo/Raphael Satter, File)
உலகெங்கும் ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்தும் Microsoft நிறுவனத்தின் Teams, Outlook சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அது குறித்து விசாரணை நடத்துவதாக Microsoft நிறுவனம் இன்று (25 ஜனவரி) தெரிவித்துள்ளது.
அதன் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டதாகவும் அதைச் சரிசெய்யும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் Microsoft கூறியது.
ஆயினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.
ஆனால் Downdetector இணையத்தளத்தின்படி இந்தியாவில் 3,900க்கும் மேற்பட்ட தடங்கல் சம்பவங்களும் ஜப்பானில் 900க்கும் அதிகமான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் அத்தகைய சம்பவங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சேவைத் தடங்கல் ஏற்பட்டபோது பெரும்பாலான பயனீட்டாளர்களால் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியவில்லை. அழைப்புகளில் சேர முடியவில்லை. Teams செயலியின் எந்த அம்சங்களையும் பயன்படுத்த இயலவில்லை.
அது குறித்துப் பலரும் Twitterஇல் பதிவிட்டு வருகின்றனர்.
-Reuters