Microsoft நிறுவனத்தின் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன...

(படம்: Josep LAGO / AFP)
Microsoft நிறுவனம் அதன் சேவைகளில் ஏற்பட்ட தடங்கலைச் சரிசெய்துள்ளதாகத் தெரிவித்தது.
சேவைகளில் தடங்கல் ஏற்பட்டபோது பெரும்பாலான பயனீட்டாளர்களால் Teams, Outlook சேவைகளைப் பயன்படுத்த முடியவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் Microsoftஇன் சேவைகள் பாதிக்கப்பட்டன.
சீனாவில் மட்டும் சேவைகள் பாதிக்கப்படவில்லை.
Microsoft நிறுவனத்தின் Azure தளத்தை 15 மில்லியன் நிர்வாக வாடிக்கையாளர்களும் 500 மில்லியன் பயனீட்டாளர்களும் பயன்படுத்துவதாக Microsoft தெரிவித்தது.
Azure தளத்தை உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துவதால் இத்தகைய செயலிழப்புகள் முக்கியமான பல சேவைகளைப் பாதிக்கும்.
-Reuters